Translated into Tamil from a Kannada article by Sri Srinidhi Kulkarni
மனித பிறவி விலைமதிப்பற்றது அதை வீணாக்காதீர்கள் என்று தாசர்கள் மனிதனை எச்சரித்துள்ளார். (மானவ ஜன்ம தொட்டது இத ஹானி மாடலு பேடி ஹுச்சப்பகளிரா)
மற்ற விலங்குகளாய் பிறந்தால் எந்த உணர்வும் அறிவும் இருப்பதில்லை, மனிதனுக்கு மட்டுமே உணர்வும், அறிவும், ஞானமும் இருக்கிறது.
வாழ்க்கை என்பது ஒரு கலை என்று ஒரு மனிதனுக்கு மட்டுமே கற்பிக்க வேண்டிய சூழ்நிலை எழுகிறது. ஜீவனம் என்ற வார்த்தையில், வனம் என்றால் ‘காடு’ என்று பொருள்.
காடு விலங்குகளுடன் கூடி கெடுதலாகவும். மரம் மூலிகை உடன் கூடி நல்லதாகவும் இருக்கிறது. அதேபோல், மனிதனின் வாழ்க்கை, கெட்டவர்களின் கூட்டுறவுடன், கெடுதலாக மாறுகிறது. நல்ல மனிதர்களுடனான தொடர்பினால் நல்லதாகவும் மாறுகிறது என்பதையும் கவனியுங்கள் . ஆகையால், நல்ல மனிதர்களுடன் நம்மை இணைத்துக் கொள்ளும்போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.
எனவே, நல்ல மனிதர்களுடன் உறவை வளர்த்து வெற்றியை நோக்கி செல்ல வேண்டுமா அல்லது வேறு வழி செல்ல வேண்டுமா என்பதை
நீங்களே முடிவு செய்யுங்கள்?
வெற்றியா அல்லது தோல்வியா?